”பெர்லின்” சர்​வதேச திரைப்பட விழாவுக்​குத் தேர்வு!!

சென்னை:
அறி​முக இயக்​குநர் இரா.க​வுதம் இயக்​கத்​தில் உருவாகியுள்ள திரைப்​படம், ‘சிக்​கலான குடும்​பத்​தின் உறுப்பினர்​கள்’.

இதில் ‘கூழாங்​கல்’ கறுத்​தடை​யான், கூத்துப்​பட்டறை கலைஞர் அஜித்​கு​மார், யுவ, விஜய் சூரன், அறி​முக நடிகர்​களான காஞ்​சனா செந்​தில், டி.பன்னீர்செல்வம், சரவண சித்​தார்த் உள்​ளிட்​டோர் நடித்துள்​ளனர்.

சித்தார்த் கதிர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்படத்​தைத் தமிழரசன் காளி​தாஸின் லேப்​ரிந்த் நேரடிவ்ஸ் நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இப்​படம் பெர்லின் சர்​வதேச திரைப்பட விழாவுக்​குத் தேர்வாகி இருக்​கிறது.

அலை​பா​யுதே, பருத்​திவீரன், கொட்டுக்​காளி படங்களுக்கு பிறகு இப்​பிரி​வில் தேர்​வாகி இருக்​கும் 4-வது தமிழ்ப் படம் இது. அறி​முக இயக்​குநரின் முதல் படமே பெர்​லின் பட விழாவுக்​குத் தேர் வாவது இதுவே முதன்முறை.

இப்​படம் குறித்து பெர்​லின் சர்​வதேச திரைப்பட விழா​வின் அதி​காரப்​பூர்வ இணைய பக்​கத்​தில், “ஓர் இளைஞன் சிறு வயதிலேயே இறந்து விடு கிறான்.

அன்​றாடத்தை அசைத்து உலுக்​கும் மரணம் அது. இறுதிச்சடங்கு நடக்​கிறது.

அதில் பெரு​மள​வில் துக்​கம் தெரிய​வில்​லை. குடும்ப உறவுகளின் வன்​முறையை நேர்த்​தி​யுட​னும் நுண்​ணிய கலைச் செறி​வுட​னும் காட்​டும் இத்​திரைப்​படம், வெறுமைக்​கும் மன அமை​திக்​கும் இடையே​யான ஓர் ஊசலாட்​டம்.

அறி​முக இயக்​குநரின் அசாத்​தி​ய​மான முயற்சி” என்று குறிப்​பிட்​டுள்​ளது. தயாரிப்​பாளர் தமிழரசன் காளி​தாஸ் கூறும்​போது, “இன்​னும் பல சர்வதேச பட விழாக்​களுக்கு இப்​படத்தை அனுப்ப இருக்கிறோம்.

அதற்​குப் பிறகு திரையரங்க வெளி​யீடு இருக்​கும்” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *