‘சிக்கந்தர்’ திரைக்கதையை மாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்! – ராஷ்மிகா மந்தனா தகவல்….

சென்னை:
ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்​கத்​தில் சல்​மான்​கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்​தனா நாயகி​யாக நடித்​தார். சத்​ய​ராஜ், சர்​மான் ஜோஷி என பலர் நடித்​த இந்தப் படம் கடந்த வருடம் வெளி​யானது.

மிக​வும் எதிர்பார்க்​கப்​பட்ட இப்​படம் ரூ.200 கோடி பட்​ஜெட்​டில் உருவாகி, வணி​கரீ​தி​யாகத் தோல்​வியைத் தழு​வியது. இப்படத்​தின் தோல்விக்கு சல்​மான் கான் படப்​பிடிப்​புக்​குத் தாமதமாகவந்​ததும் காரணம் என்று ஏ.ஆர்​.​முரு​க​தாஸ் கூறி​யிருந்​தார். அதற்கு சல்​மான் கான் பதிலடி கொடுத்திருந்​தார்.

இந்​நிலை​யில், ராஷ்மிகா மந்​தனா சமீபத்​தில் அளித்​துள்ள பேட்​டி​யில், இயக்​குநர் முரு​க​தாஸ் படம் தொடங்​கிய பின் திரைக்கதையை மாற்​றி​விட்​ட​தாகக் கூறி​யுள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “சிக்​கந்​தர் கதை பற்றி முருக​தாஸ் சாருடன் பேசி​யது நினை​விருக்​கிறது. அந்தக்கதை உண்​மை​யில் முற்​றி​லும் சுவாரஸ்​ய​மாக​வும் மாறு​பட்​ட​தாக​வும் இருந்​தது. பிறகு படப்​பிடிப்​பில் நடந்தவை வித்​தி​யாச​மாக இருந்​தன.

பொது​வாக சில படங்களில் அப்​படித்​தான் நடக்​கும். ஒரு கதையைக் கேட்கும்​போது, அது ஒன்​றாக இருக்​கும். திரைப்​பட​மாக உரு​வாகும் கால​கட்​டத்​தில், நடிகர்​களின் நடிப்​புக்கு ஏற்ப, படத்​தொகுப்​புக்கு ஏற்ப, பல விஷ​ங்கள் மாறும். அது சினிமா​வில் சகஜம்​தான். ‘சிக்​கந்​தர்’ படத்​தி​லும் அது நடந்தது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *