சென்னை:
அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படத்துக்கு ‘கான் சிட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார்.
ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
“ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தைக் காட்டும் படம் இது. முழுமையான பொழுதுபோக்கு படமான இதன் 80 சதவிகிதப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது ” என்று படக்குழு தெரிவித்துள்ளது.