மதுரை
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் (கருப்பட்டி) தெற்கு தெருவில் அமைந்துள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், விக்கிரக பிரதிஷ்டை மற்றும் திருக்குட நன்னீராட்டுவிழா என்ற மகா கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு மேல் சாந்தி ஸ்ரீராம் சுப்பிரமணியன் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை மங்கல இசையுடன் கோ பூஜை நடந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.
அதன்பின் விமானத்திற்கு பூஜை நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
இதைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அர்ச்சனை, பூஜை நடைபெற்று பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் இரும்பாடி, கருப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.