திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. \
இத்திருக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இத்திருக்கோவிலில் மகா கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.
நேற்று மாலை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகளுடன் மகா கந்த சஷ்டி உற்சவ நிகழ்ச்சிகள் துவங்கின.
இன்று காலையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெற்றது. மாலையில் யாகசாலை பூஜையுடன் ரக்ஷா பந்தனம். சுவாமி பிரகார புறப்பாடு உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
வியாழக்கிழமை காலை 2-ம் காலை யாகசாலை பூஜைகளும்,சுவாமி உள் பிரகார புறப்பாடும் மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகளும், சுவாமி உள் பிரகார புறப்படும் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள், சுவாமி உள்பிரகார புறப்பாடும் மாலை 5-ம் கால யாகசாலை பூஜைகள், சுவாமி உள் பிரகார புறப்பாடு உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
சனிக்கிழமை காலை 6-ம் கால யாகசாலை பூஜைகளும், சுவாமி உள்புறப்பாடும், காலை 11 மணிக்கு ஸ்ரீசண்முகர் சத்ருசம்ஹாரதிரிசதி புஷ்பார்ச்சனை, மாலை 5.30 மணி முதல் 7-ம் கால யாகசாலை பூஜைகளும், சாமி உள்பிரகார புறப்பாடும் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8-ம் கால யாகசாலை பூஜைகளும், சாமி உள் பிரகார புறப்பாடும், மாலை 4 மணிக்கு வேல் வாங்கும் விழாவும்,6 மணிக்கு 9-ம் கால யாகசாலை பூஜைகளும், சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெறுகின்றன.
27-ம் தேதி திங்கட்கிழமை காலை 10-ம் கால யாகசாலை பூஜை, கலச பூஜை, பூர்ணாஹுதி கலச அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
அதன்பின், சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும், சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது.
மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அபிஷேகமும், சந்தன காப்பும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் மாதவன் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.