சென்னை,
படப்பிடிப்பு முடிந்து பல அண்டுகளாக வெளியாகாமல் இருந்தரஜினியின் படம் இறுதியாக திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், அவர் நடித்து பல தசாப்தங்களாக திரைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டிருந்த, இந்தி திரைப்படமான ’ஹம் மே ஷாஹேன்ஷா கோன்’ இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன், சத்ருகன் சின்ஹா, ஹேம மாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, ஷரத் சக்சேனா, ஷரத் சக்சேனா, மறைந்த அம்ரிஷ் பூரி மற்றும் ஜக்தீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
மறைந்த ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 1989-ல் முடிந்தது. தற்போது 37 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது. அதன்படி, ’ஹம் மே ஷாஹேன்ஷா கோன்’ ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளதாக தெரிகிறது.