இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிய புதிய படம் “ஹிட் லிஸ்ட்”. ஓடிடியில் !!

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிய புதிய படம் “ஹிட் லிஸ்ட்”. கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே பாசிட்டிவ் ரெஸ்பான்சை பெற்றது. அறிமுக நாயகனான விஜய் கனிஷ்காவின் நடிப்பு பெருமளவு பாராட்டுப்பெற்றது.

ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் ஒன் லைன்.

படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் அஹா தமிழ் வாங்கியுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் நாளை திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் பார்க்க தவர விட்ட ரசிகர்கள் ஓடிடியில் கண்டு களியுங்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *