அட்லி இயக்கும் அல்லு அர்ஜுன் படத்​தில் ராஷ்மிகாவுக்கு ஆக் ஷன் காட்சி!!

சென்னை:
அல்லு அர்ஜுன் நடிக்​கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வரு​கிறார், அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்​டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார்.

இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இதில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்பட்​டது.

இதுபற்றி மிருணாள் தாக்​குரிடம் கேட்​ட​போது, “ஓ அப்படியா? அதில் நடிக்​கிறே​னா? அது நடப்​ப​தற்​காகப் பிரார்த்​தி​யுங்​கள். நடந்​தால் கொண்​டாடு​வோம்” என்று தெரி​வித்​துள்​ளார். இதனால் அவர் இதில் நடிக்​க​வில்லை என்று தெரி​கிறது.

ஆனால், ராஷ்மிகா இதில் நடித்து வருகிறார். அவருக்​குப் படத்​தில் முக்​கிய கதா​பாத்​திரம் என்​றும் ஆக்ஷன் காட்சிகளும் அவருக்கு இருப்​ப​தாக​வும் இதன் படப்​பிடிப்பு தற்​போது மும்​பை​யில் நடந்து வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. புஷ்பா படங்​களுக்​குப் பிறகு அல்லு அர்ஜுனுடன் மீண்டும் நடிக்​கிறார் ராஷ்மி​கா.

இதற்கிடையே, விஜய் தேவர​கொண்​டா​வும் ராஷ்மிகா​வும் இம்​மாதம் 26-ம் தேதி திரு​மணம் செய்​து​கொள்ள இருப்பதாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *