வா​ராணசி ஆணை​யர் ராஜலிங்​கத்​துக்கு சிறந்த பணி​களுக்​காக அவரைப் பாராட்டி ‘சங்​கத் தமிழன்’ எனும் விருது அளிக்​கப்​பட்​டுள்​ளது!!

புதுடெல்லி:
பிரதமர் மோடி​யின் மக்​களவை தொகு​தி வாராணசி மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்தவர் தமிழ​ரான ராஜலிங்​கம். பதவி உயர்​வுக்கு பிறகும் வாராணசி மண்​டலத்​தின் ஆணை​ய​ராகத் தொடர்​கிறார்.

அவர் உ.பி., மத்​திய அரசுகளின் பல வளர்ச்​சித் திட்​டங்​களைப் பிரதமர் மோடி தொகு​தி​யில் பொறுப்​புடன் செயல்​படுத்​து​வது​ தான் இதற்​குக் காரணம்.

அத்​துடன், வாராணசி​யில் பிரதமர் மோடி​யின் எண்​ணத்​தில் உரு​வான காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை 4 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறார்.

அத்துடன், கடந்த வருடம் காசி தமிழ்ச் சங்​கத்தை தொடங்​கி​னார். இது​போன்ற சிறந்த பணி​களுக்​காக அவரைப் பாராட்டி ‘சங்​கத் தமிழன்’ எனும் விருது அளிக்​கப்​பட்​டுள்​ளது.

பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக அரங்​கில், காசி தமிழ்ச் சங்​கம் நடத்​திய பொங்​கல் விழா​வில் இவ்​விருது அளிக்​கப்​பட்​டது.

ராஜலிங்​கம் ஆலோ​சனை​யின் பேரில், காசி தமிழ்ச் சங்​கத்​தினர் வாராணசி​யில் தமிழ் மொழி கற்​பித்து வரு​கின்​றனர்.

இதன்​மூலம், வாராணசி​யில் பல தலை​முறை​களாக வாழும் தமிழ்க் குடும்​பங்​களின் குழந்​தைகளுக்​குப் பெரும் பயனாக உள்​ளது.

இவ்​விழா​வின் தலைமை விருந்​தின​ராக பங்​கேற்ற ராஜலிங்​கம் பேசும்​போது, “காசி​யில் தமிழர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் உள்​ளனர். இந்த காசி தமிழ்ச் சங்​கம் மூல​மாக, நம் தமிழ்​நாட்​டின் பெரு​மையை பரப்​புவது அவசி​யம்” என்​றார்.

தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூரைச் சேர்ந்த சுப்​பை​யா, மாலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி​யில் வேதி​யியல் பிரி​வில் பொறி​யியல் பட்​டம் பெற்​றவர்.

தமிழை விருப்​பப்​பாட​மாக எடுத்து 2007-ல் ஐபிஎஸ் பெற்​றார். பிறகு மீண்​டும் அதே தமிழுடன் யுபிஎஸ்சி தேர்வை எழுதி 2008-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்​றார்.

இந்​நிகழ்​வில் வாராணசி மாவட்ட காவல் குற்​றப்​பிரிவு இணை ஆணை​ய​ரான தமிழர் த.சர​வணன், அவரது மனை​வி​யும் வரு​மான வரி இணை இயக்​குநரு​மான ஆர்​.ஐஸ்​வர்யா ஆகியோ​ரும் கலந்து கொண்​டனர்.

தமிழ்​நாட்​டைச் சேர்ந்த உயர் அதி​காரி​கள், காசி​வாழ் தமிழர்​கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *