புதுச்சேரி:
லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ளார். தவெகவில் இருந்த நடிகர் தாடி பாலாஜி அக்கட்சியிலிருந்து விலகி, லட்சிய ஜனநாயக கட்சியில் கடந்த மாதம் சேர்ந்தார்.
வரும் தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தவெகவுடன் கூட்டணி அமைக்க ஜோஸ் சார்லஸ் தொடர்ந்து முயற்சித்தும், அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை.
இதுதொடர்பாக தனது உறவினரும், தவெகவில் முக்கிய புள்ளியான ஆதவ் அர்ஜூனாவை ஜோஸ் சார்லஸ் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் பரப்புரை பொதுச் செயலாளராக நடிகர் தாடி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், லட்சிய ஜனநாயக தலைவர் ஜோஸ் சார்லஸை நேற்று நேரில் சந்தித்தார்.