திமுக ஆட்​சி​யில் 50 சதவீதம் நல்​லது நடந்​துள்​ளது; 50 சதவீத கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும் – பிரேமலதா கருத்து!!

ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, இளைஞரணிச் செய​லா​ளர் விஜய பிர​பாகரன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

அதன்​பின் செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது: தேமு​தி​க​வுக்​கும், தமிழக மக்​களுக்​கும் நல்​லது நடக்க வேண்​டும் என்று ஆண்​டாள் தாயாரிடம் வேண்​டிக் கொண்​டேன். தேமு​தி​க​வுக்கு மக்​களிடையே அதிக ஆதரவு உள்​ளது.

பிரச்​சா​ரப் பயணம் முடிந்து பிப்​ர​வரி 3-ம் தேதி சென்னை திரும்​பிய பின்​னர், கட்சி நிர்​வாகி​களிடம் கூட்​டணி குறித்து ஆலோ​சித்​து, தக்க அறி​விப்பு வெளி​யிடப்​படும்.

தமிழகம் பெண்​களுக்கு பாது​காப்​பான மாநிலம் என்று முதல்​வர் கூறி​யுள்​ளது அவரது கருத்து. ஆனால், தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு கேள்விக்​குறி​யாக உள்​ளது.

திமுக ஆட்​சி​யில் 50 சதவீதம் நல்​லது நடந்​துள்​ளது. 50 சதவீத கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு பிரேமலதா கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *