கோரிக்​கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்தை தொடங்​கி​ய அரசு மருத்துவர்கள்!!

சென்னை:
கோரிக்​கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் அரசு மருத்துவர்கள் தொடங்​கி​யுள்​ளனர்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்​து​வர்​களுக்​கான திருத்​தப்​பட்ட ஊதி​யம் வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்​கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்​டும்.

20 ஆண்​டு​கள் கடந்த மூத்த முது​நிலை மருத்​து​வர்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்க வேண்​டும். நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​து​வப் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பல ஆண்​டு​களாக அரசு மருத்​து​வர்​கள் போராடி வரு​கின்​றனர்.

இதற்​காக, பல்​வேறு அரசு மருத்துவர்கள் சங்​கங்​கள் ஒருங்​கிணைந்​து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பை (FOGDA) உரு​வாக்கி சுகா​தா​ரத் துறை செயலர், அமைச்​சருடன் பல கட்ட பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​யும் தீர்வு எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, கூட்​டமைப்பு சார்​பில் கடந்த 12-ம் தேதி​முதல் தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்​கைகள் அடங்​கிய அட்​டையை அணிந்து பணி​யாற்றி வரு​கின்​றனர்.

அடுத்த கட்​ட​மாக 48 மணி நேர தொடர் உண்​ணா​விரதப் போராட்​டத்தை அரசு மருத்துவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் நேற்று தொடங்​கி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் பால​கிருஷ்ணன், ராமலிங்​கம், அகிலன், சுந்​தரேசன் ஆகியோர் கூறுகை​யில், “கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்​ணா​விரதப் போராட்​டத்தை சென்​னை​யில் மேற்​கொண்​டனர்.

அப்​போது, எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த தற்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் வந்து அரசு மருத்​து​வர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு அளித்​து, `தி​முக அரசு அமைந்​தவுடன் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும்’ என்று உறு​தி​யளித்​தார்.

ஆட்சி அமைந்​தவுடன், `மக்​களை நீங்​கள் பார்த்​துக் கொள்​ளுங்​கள். உங்​களை நாங்​கள் பார்த்​துக் கொள்​கிறோம்’ என்று சொன்​னார். கரோனா பெருந்​தொற்று காலத்​தில் தமிழக மக்​களை தனி​யார் மருத்​து​வ​மனை​கள் கைவிட்ட நிலை​யில், ஆயிரக்​கணக்​கான மக்​களின் உயிரை அரசு மருத்துவர்கள் காப்​பாற்​றினர். இது​வரை அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற​வில்​லை. அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்​ற வேண்​டும்​” என்​று தெரி​வித்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *