மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் கவின் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்களும் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,
கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.
இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான “விண்டேஜ் லவ்” பாடல் வீடியோ இன்று வெளியாகியது. இதில் கவின் ஒரு கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் காதலியைப் பார்த்து பாடுவதாக காட்சிகள் அமைந்து இருக்கிறது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
….