மீண்டும் சூடுபிடிக்கும் கப்பலூர் சுங்கச் சாவடி பிரச்சினை !!

மதுரை:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்நிலையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக திருமங்கலத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மதுரை ஒத்தக்கடையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அக்கூட்டத்தில், சுங்கச்சாவடியால் மக்கள், வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குவோர் அன்றாடம் படும் சிரமங்களை ஒரு குறும்படம் மூலம் பார்வையாளர்களுக்குப் போட்டுக்காட்டி ஸ்டாலின் கவலை தெரிவித்திருந்தார்.

அதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சுங்கச்சாவடி அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும் என்று தென் மாவட்ட மக்கள் நம்பினர். ஆனால், திமுக ஆட்சி நிறைவுபெறும்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது.

இந்நிலையில் வழக்கம்போல் திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் திருமங்கலம் தொகுதிக்குள், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்….’ என்று சுங்கச்சாவடி பற்றி வாக்குறுதி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப் புக் குழுவினர் யார் வாக்குறுதியை யும் நம்பாமல் வரும் 5-ம் தேதி திருமங்கலத்தில் அடுத்தகட்டப் போராட்டத்துக்கும், சட்டப் பேரவைத் தேர்தலில் எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து அக்குழுவினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் “கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி கடந்த 15 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

சுங்கச்சாவடி அமைந்துள்ள திருமங்கலம் தொகுதி மக்களுக்கு நிரந்தரத்தீர்வு வேண்டி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் திருமங்கலம் தனியார் மண்டபத் தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்,” என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

‘வேட்பாளரை நிறுத்துவோம்’ – போராட்டங்களுக்குப் பிறகு மதுரை ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் தற்காலிக நிவாரணமாகவே உள்ளன.

இந்தச் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது.

கடந்த தேர்தலில் நம்பி ஏமாந்துவிட்டோம். இந்த முறை அவ்வளவு எளிதாக விடப்போவதில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டும் கடைசி வரை கிடைக்கவில்லை.

அதனால், அரசியல் கட்சியினருக்கு மக்களின் வலியைப் புரிய வைக்க, எங்கள் போராட்டக்குழு சார்பில் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம்.

அப்போதுதான் இப்பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும், என சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *