துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்தது பற்றி மனம் திறந்த நடிகர் சிலம்பரசன்!!

சென்னை:
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் “அரசன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்து இருந்தார். சிலம்பரசன் – அஜித் குமார் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்தது பற்றி மனம் திறந்துள்ளார்.

இது குறித்து பேசிய சிலம்பரசன், “நான் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக துபாய் சென்றிருந்தேன்.

அஜித் குமாரின் பந்தயப் பயிற்சி செய்யும் இடம் வழியிலேயே இருந்தது. நான் அவரை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன், இப்போது சரியான வாய்ப்பு கிடைத்தது.

அதே நேரத்தில், பந்தயத்தின் போது அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால், நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன். AK வரச் சம்மதித்து என்னை சந்தித்தார்.

என்னை சந்தித்த பிறகு AK மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் தனது பந்தயம் குறித்து மிக விரிவாக பகிர்ந்துகொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்,” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *