பூஜா, சவுபின் அசத்தல்… ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் !!

சென்னை:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பெரிய ஆர்ப்பாட்டமின்றி சற்றே அடக்கி வாசிக்கப்பட்ட அனிருத்தின் இசையில் ‘மோனிகா’ பாடல் துள்ளளும் இதமும் கலந்துள்ளது. விஷ்ணுவின் எளிமையான வரிகளும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளது.

சுப்லாஷினி, அனிருத்தின் குரல்களுடன் அசல் கோலாரின் ராப் கச்சிதமாக செட் ஆகியிருக்கிறது. குறிப்பாக, ‘மோனிகா பெல்லூசி’ பெயருக்கு நியாயம் சேர்க்கும் விதமாக பாடல் முழுவதும் சிவப்பு உடையில் நடன அசைவுகளால் ரசிகர்களின் மனம் ஈர்க்கிறார் பூஜா ஹெக்டே.

இந்தப் பாடல் வீடியோவின் மெகா ஆச்சரியங்களுள் முதன்மையானதாக இருக்கிறது சவுபின் சாஹிரின் பங்களிப்பு. ஆம், மலையாளத்தில் உணர்வுபூர்வ நடிப்பால் வசீகரிக்கும் சவுபின் இங்கே முழு எனர்ஜியுடன் அட்டகாசமாக குத்தாட்டம் போட்டு, பூஜா ஹெக்டாவின் பிரசன்ஸை மீறி கவனிக்க வைப்பது ஆச்சரிய அச்சத்தலே. வீடியோ இணைப்பு…

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *