மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 82 கனஅடி​யாக சரிந்​துள்​ளது!!

மேட்டூர் / தருமபுரி:
மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 82 கனஅடி​யாக சரிந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை தணிந்​துள்​ளதால் மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து குறைந்​துள்​ளது.

அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 220 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று விநாடிக்கு 82 கனஅடி​யாக சரிந்​துள்​ளது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் 92.12 அடியி​லிருந்து 91.96 அடி​யாக​வும், நீர் இருப்பு 55.10 டிஎம்​சியி​லிருந்து 54.91 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது. ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த 4-ம் தேதி காலை 6 மணி அளவீட்​டின்​போது நீர்​வரத்து விநாடிக்கு 2,000 கனஅடி​யாகப் பதி​வானது.

5-ம் தேதி காலை​யில் விநாடிக்கு 1,500 கனஅடி​யாகக் குறைந்​தது. நேற்று காலை அளவீட்​டின்​போது நீர்​வரத்து மேலும் சரிவடைந்து விநாடிக்கு 1,200 கனஅடி​யாக பதி​வானது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *