பூம்​பு​கார் நிறு​வனம் மூலம் பத்​தமடை பாய் உள்பட 23 கலைப் பொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு – அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் !!

சென்னை:
பூம்​பு​கார் நிறு​வனம் மூலம் பத்​தமடை பாய் உள்பட 23 கலைப் பொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடுபெறப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் தெரி​வித் துள்ளார்.

தமிழக அரசின் பொதுத்​துறைநிறு​வன​மான பூம்​பு​கார் சார்​பில்கைவினைப் பொருட்​கள் கண்​காட்​சி, கருத்​தரங்​கம் மற்​றும் பூம்​பு​கார் விருது வழங்​கும் விழாசென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் மாவட்ட அளவில்சிறந்த கைவினைஞர்​களுக்கு பூம்​பு​கார் விருதுகளை அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் வழங்​கினார்.

மேலும், தமிழக கைவினைஞர்​களுக்கு சந்தை வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள பூம்​பு​கார்நிறு​வனத்​தின் புதிய மின்​வணிக இணை​யதளத்​தை​யும் (www.poompuhar.com) தொடங்​கி​வைத்​தார்.

தொடர்ந்து அவர் பேசி​யது: பூம்​பு​கார் நிறு​வனம், கடந்த 52 ஆண்​டு​களாக கைவினைக் கலைஞர்​களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரு​கிறது. கடந்த 5 ஆண்டு காலத்​தில் நேரடி விற்​பனை, இணை​யதள விற்​பனை, ஏற்​றுமதி ஆகிய​வற்​றின் மூலம் ரூ. 232 கோடியே 22 லட்​சம்மதிப்​பிலான கலை பொருட்​களை விற்​பனை செய்து சாதனைபடைத்​துள்​ளது.

தமிழகத்​தின் கைவினைப் பொருட்​களை உலக அளவில் கொண்டு செல்ல பூம்​பு​கார் நிறு​வனத்​தின் மூலம் பூவி​சார் குறி​யீடு​கள் பெற ஏற்​பாடு செய்​யப்​படு​கிறது. அந்த வகை​யில் கள்​ளக்​குறிச்​சி, அரும்​பாவூர் – மரச்​சிற்​பங்​கள், தஞ்​சாவூர், கருப்​பூர் கலங்​காரி – ஓவி​யங்​கள், மாமல்​லபுரம், மயி​லாடி – கற்​சிற்​பங்​கள், சுவாமிமலை பஞ்​சலோக சிற்​பங்​கள், பத்​தமடை பாய் என 23 கைவினைப் பொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெறப்​பட்​டுள்​ளது. 10 கைவினைப் பொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெற நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சமு​தா​யத்​தின் அனைத்து வகை தொழில்​முனை​வோரும் பயன்​பெறும் வகை​யில், கலைஞர் கைவினைத் திட்​டத்தை அரசுசெயல்​படுத்தி வரு​கிறது.

பூம்​பு​கார் நிறு​வனத்​தின் மூலம் இந்த திட்​டத்​தின்​கீழ் 504 கைவினைக் கலைஞர்​கள் ரூ. 2 கோடியே 52 லட்​சம் மானி​யத்​துடன் ரூ.15 கோடியே 12 லட்​சம் கடன் பெற்று பயன் அடைந்​துள்​ளனர்.

இத்​திட்​டத்தை கைவினைஞர்​கள் நன்கு பயன்​படுத்தி கொள்ளவேண்​டும். இவ்​வாறு பேசி​னார்.

விழா​வில் கைத்​தறி, கைத்​திறன், துணிநூல், கதர்த்​துறை​ செயலர் அமுதவல்​லி, மத்​திய அரசின் கைவினை பொருட்​கள் ஏற்​றுமதி வர்த்தக மண்டல மேலா​ளர் ஸ்ரீதே​வி, கைவினை பொருட்​கள் மேம்​பாட்டு ஆணையத்தின் தென்​மண்டல அலு​வலர் லஷ்மன்​ ராவ்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *