வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசி​யல் கட்​சிகளும் கம்மா சமூகத்தைச் சேர்ந்த 30 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்​டும் – கம்மா குளோபல் ஃபெடரேஷன் மாநாட்டில் வலியுறுத்தல்!!

காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த சேந்​தமங்​கலத்​தில் கம்மா குளோபல் ஃபெடரேஷன் சார்​பில் நடை​பெற்ற மாநாட்​டில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசி​யல் கட்​சிகளும் கம்மா சமூகத்தைச் சேர்ந்த 30 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்​டும் என அதன் தலை​வர் ஜெட்டி குசுமா குமார் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த சேந்​தமங்​கலத்​தில், கம்மா குளோபல் ஃபெடரேஷன் சார்​பில் மாநாடு நேற்று நடை​பெற்​றது.

கம்மா குளோபல் ஃபெடரேஷனின் நிறு​வனர் மற்​றும் தலை​வர் ஜெட்டி குசுமா குமார் குத்​து​விளக்​கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்​தார்.

இதில், தமிழ்​நாடு உள்ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்து ஏராளமான பிர​தி​நி​தி​கள் கலந்​து கொண்​டனர்.

கம்மா குளோபல் ஃபெடரேஷன் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. இதன்மூலம், ஏற்​பாடு செய்​யப்பட்ட நேரடி சந்​திப்பு நிகழ்ச்​சிகளில், இந்த நிகழ்வு பெரிய நிகழ்ச்​சி​யாக அமைந்​தது.

கம்மா சமூகங்​களை ஒன்​றிணைத்​து, கலாச்​சா​ரத் தொடர்​பு​களை வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த ஃபெடரேஷன் அமைக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது, இந்த கூட்​டமைப்பு உலகள​வில் சுமார் 2.1 கோடி மக்​களைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​துகிறது.

இது, இந்​தி​யா​வின் மக்​கள் தொகை​யில் சுமார் 1.5 சதவீத​மாகும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநாட்​டில், கடந்த ஓராண்​டில் கூட்​டமைப்​பின் செயல்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டன.

இதில், அனை​வரை​யும் ஒருங்​கிணைப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. பின்​னர், மாநாட்​டில் ஜெட்டி குசுமா குமார் பேசி​ய​தாவது:

நமது சமூகத்​துக்​குள் ஒரு கட்​டமைக்​கப்​பட்ட உரை​யாடலை அனு​ம​திக்​கும் ஒரு பொது​வான தளத்​துக்​கான வளர்ந்து வரும் தேவையே இந்​நிகழ்ச்​சி.

கடந்த ஓராண்​டில் கூட்​டமைப்​பின் விரி​வாக்​கம், முன்​னுரிமை​கள் மற்​றும் செயல்​பாடு​களை ஒருங்​கிணைக்க நேரடி சந்​திப்​பு​கள் அவசி​ய​மாகி​யுள்​ளது.

இப்​போது, நமது கவனம் அமைப்பு உரு​வாக்​கம், பிராந்​தி​யப் பிரிவு​களின் தொடர்ச்​சி​யான பங்​கேற்பு மற்​றும் கூட்​டமைப்பு தொடர்ச்சி மற்​றும் தெளிவுடன் செயல்பட அனு​ம​திக்​கும் அமைப்​பு​களை உரு​வாக்​கு​வ​தில் உள்​ளது.

இந்த மாநாட்​டிலிருந்து உரு​வாகும் நீண்ட கால நோக்​கங்​களில் ஒன்​றான, தமிழக சட்​டப்​பேர​வை​த் தேர்தலில் போட்டியிட அனைத்து அரசி​யல் கட்​சிகளி​லிருந்​தும் குறைந்​தது 30 கம்மா சமூகத்தினருக்கு வாய்ப்பளித்து தேர்ந்​தெடுக்க வேண்டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், தமிழ்​நாடு காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் எம்.பி.விஸ்​வ​நாதன் மற்​றும் கம்மா குளோபல் ஃபெடரேஷன் நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *