சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்கு குலுக்​கல் முறை​யில் தேர்வு!!

சென்னை:
சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்கு குலுக்​கல் முறை​யில் தேர்வு இன்று (பிப்​.12) நடை​பெறுகிறது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்​கான குலுக்​கல் முறையி​லான தேர்வு சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் இன்று (பிப்​.12) காலை 10.00 மணிக்கு நடை​பெறுகிறது.

ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி என்​.​பால் வசந்​தகு​மார் மேற்​பார்​வை​யில் குலுக்​கல் நடை​பெறுகிறது.

சென்னை மெரினா கடற்​கரை 4 திட்​டப் பகு​தி​களில் மொத்​த​மாக 300 கடைகள் அமைக்​கப்பட உள்​ளன.

அவற்​றில் உணவு வகைப்​பாட்​டுக்கு 100 வியா​பாரி​களும், அலங்​கார மற்​றும் பரிசுப் பொருட்​கள் வகைப்​பாட்​டுக்கு 100 வியா​பாரி​களும் மற்​றும் பொம்மை பொருட்​கள் வகைப்​பாட்​டுக்கு 100 வியா​பாரி​களும் குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யப்​பட​வுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *