மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000: கோவையில் திமுகவினர் பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

கோவை,
தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தொகை நேற்று பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


இதையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன் கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


உதவித்தொகை பெற்ற பெண்கள் கூறுகையில், “மாதந்தோறும் வழங்கப் பட்டு வந்த உரிமைத்தொகை தற்போது ரூ.5,000 ஆக வழங்கப்பட்டுள்ளது.

இது குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவியாக இருக்கும்,” என்று தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *