என்னுடைய ஜனநாயக கடமையை நான் ஆற்றி உள்ளேன் – பேட்டி அளித்த சிங்கை ராமசந்திரன்!!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு,கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இதில் மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 225 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ராணுவத் துறையினர் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பணியாற்றுவதற்காக வாக்குப்பதிவு முதன்மை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 14,772 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவி, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், கைவிரலில் வைக்கப்படும் மை, வாக்காளர் பட்டியல், வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டு இன்று காலையில் 6 முதல் 7 மணி வரை கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 7 மணி முதல் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வரதராஜபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலாவதாக வந்து தனது வாக்குப்பதிவை பதிவு செய்தார்.

தொடர்ந்து காலையிலே வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்குச் சாவடிகளில் வந்து வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.தொடர்ந்து பேட்டி அளித்த வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், என்னுடைய ஜனநாயக கடமையை நான் ஆற்றி உள்ளேன்.

அதே போல் எல்லாரும் இதே மாதிரியான ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தெரிவித்தார்.தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை நன்றாக செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *