மன்​னார் வளை​குடா கடற்​பகு​தி​யில் ரூ.25 கோடி மதிப்​புள்ள ‘ஹாஷிஷ்’ போதைப் பொருளை பறி​முதல் செய்த இலங்கை கடற்​படை​யினர்!!

ராமேசுவரம்:
மன்​னார் வளை​குடா கடற்​பகு​தி​யில் ரூ.25 கோடி மதிப்​புள்ள ‘ஹாஷிஷ்’ போதைப் பொருளை பறி​முதல் செய்த இலங்கை கடற்​படை​யினர், இது தொடர்​பாக 2 பேரைக் கைது செய்​தனர்.

தலைமன்​னார் அருகே மன்​னார் வளை​குடா கடற்​பகு​தி​யில் இலங்கை கடற்​படை​யினர் ரோந்து சென்​ற​போது, சந்​தேகத் ​துக்​குரிய வகை​யில் தமிழக எல்​லை​யி​லிருந்து இலங்கை எல்​லைக்​குள் ஒரு ஃபைபர் படகு நுழைந்​தது.

அந்​தப் படகை இலங்கை கடற்​படை​யினர் விரட்​டிப் பிடித்து சோதனை​யிட்​ட​ போது, உள்ளே போதைப் பொருள் பதுக்கி வைத்​திருப்​பது தெரிய வந்​தது. இதையடுத்​து, படகில் இருந்த இலங்​கை​யைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்​து, தாழ்​வுப்​பாடு கடற்​படை முகா​முக்​குக் கொண்டு சென்​றனர்.

பின்னர், இரு​வரை​யும் கைது செய்த இலங்கை கடற்​படை​யினர், படகில் இருந்த 50 கிலோ ‘ஹாஷிஷ்’ போதைப் பொருள் மற்​றும் படகை பறி​முதல் செய்​தனர். பின்​னர் அவரை போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப் பொருளின் சர்​வ​தேச மதிப்பு ரூ.25 கோடி ஆகும். கடத்​தலில் தொடர்​புடைய​வர்​கள் குறித்து இலங்கை கடற்​படை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *