வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!!

சென்னை:
வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயில் உள்​ளது. சோழர் காலத்​துக் கட்​டிடக்​கலைக்​கும் ஆன்​மிகச் சிறப்​புக்​கும் இக்​கோ​யில் ஒரு சான்​றாக விளங்கி வரு​கிறது பக்​தர்​களின் நீண்​ட நாள் கோரிக்​கையை ஏற்​று, இந்து சமய அறநிலை​ய துறை சார்​பில் நவீன ‘ஜாக்​கி’ தொழில்​நுட்​பத்​தைப்பயன்​படுத்​தி, ஒட்​டுமொத்​தக் கோயிலை​யும் தரைமட்​டத்​துக்கு உயர்த்​திப் பலப்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

அதே​நேரத்​தில் கோயில் புனரமைப்​புப் பணி​களும், புதிய கட்​டு​மானப் பணி​களும் நடை​பெற்று வந்​தன. இந்​நிலை​யில், இப்​பணி​கள் அனைத்​தும் நிறைவுற்ற நிலை​யில், நாளை (பிப்.22) மகா கும்பாபிஷேகம் நடை​பெற உள்ளது. அந்​த வகை​யில், கும்​பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி கணபதி பிரார்த்​தனை, தேவதா அனுக்​ஞை, யஜமான சங்​கல்​பத்​துடன் தொடங்​கியது.

தொடர்ந்​து, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், தன பூஜை, நவகிரக ஹோமம், அங்​கு​ரார்ப்​பணம், ரஷா பந்​தனம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், ஆச்​சார்ய வர்​ணம், கும்​பாலங்​காரம், கலாகர்​ஷணம், கலச புறப்​பாடு மற்​றும் முதல் கால பூஜை நடந்​தது. அதனைத் தொடர்ந்​து, நேற்று காலை விஷேச சந்​தி, இரண்​டாம் கால பூஜை, மூன்​றாம் கால பூஜை நடை​பெற்​றது.

இதையடுத்​து, இன்று (21-ம் தேதி) நான்​காம் கால பூஜை, பூர்​ணா ஹூ​தி, ஐந்​தாம் கால பூஜை நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், விழா​வின் முக்​கிய நிகழ்​வான மகா கும்பாபிஷேகம் பிப். 22-ம் தேதி (நாளை) நடை​பெறுகிறது. நாளை காலை 5 மணிக்கு ஆறாம் கால பூஜை, அவப்​ருத யாகம், பரி​வார யாக சாலை பூர்​ணாஹு​தி, ப்ர​தான யாகசாலை, மஹா பூர்​ணாஹுதி கலச புறப்​பாடு நடை​பெறுகிறது.

இதையடுத்​து, நாளை காலை 8.30 மணிக்கு ராஜகோபுரம் அனைத்து விமானங்​களுக்​கும், பரி​வார மூர்த்​தி​களுக்​கும் மகா கும்பாபிஷேகம் நடை​பெறுகிறது. பின்​னர், காலை 9 மணிக்கு மூல​வர் சுவாமி அம்​பாள் மகா கும் பாபிஷேகம் நடை​பெறுகிறது.

தொடர்ந்​து, மாலை 7 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவ​மும், அதனை தொடர்ந்து 9 மணிக்கு பஞ்​சமூர்த்தி திரு​வீதி உலா​வும் நடை​பெறுகிறது. கோயில் கும்​பாபிஷேக விழா ஏற்​பாடு​களை, கோயில் செயல் அலு​வலர் மா.ஆச்சி சிவப்​பிர​காசம், மேலா​ளர் சு.தன​சேகர் உள்​ளிட்​ட கோயில்​ அலு​வலர்​கள்​ முன்​னின்​று மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *