கண் முன்னே உயிரிழந்த மகன்.. “எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது; ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” – விபத்து ஏற்படுத்தியவரை மன்னித்த கேரள தம்பதி!!

ஐக்கிய அரபு அமீரகம்;
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ஷெராபுதீன் தனது மனைவி மற்றும் 22 மாதக் குழந்தை (1.8 வயது) ஆலன் ரூமி உடன் வசித்து வந்தார்.

கடந்த வாரம் ஒரு மாலை வேளையில், ஷெராபுதீனின் மனைவி மற்றும் குழந்தையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.


தாய் தன்னை துரத்தி வருவதை கண்ட குழந்தை, அது ஒரு விளையாட்டு என நினைத்து வேகமாக ஓடியபோது, அந்தப் பாதையில் வந்த காரின் அடியில் சிக்கினான்.

காரை ஓட்டி வந்த இந்திய நபர், உடனடியாகக் குழந்தையை தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஆலன் ரூமி உயிரிழந்தான்.

குழந்தையை இழந்த துக்கத்திலும் அந்தப் பெற்றோர் காட்டிய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை என ஷெராபுதீன் தம்பதியினர் முடிவெடுத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை மன்னிப்பதாக அவர்கள் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய ஷெராபுதீன், “எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.


இந்தக் குடும்பம் வரும் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் உம்ரா செல்லவும், பின்னர் ஈத் பண்டிகையைக் கொண்டாட இந்தியா வரவும் திட்டமிட்டிருந்தது.

ஈத் முடிந்து மீண்டும் அமீரகம் வந்ததும், நிரந்தரமாக அங்கேயே செட்டில் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர். ஆனால், ஒரு விபத்து அவர்களின் அனைத்துக் கனவுகளையும் கலைத்துவிட்டது.


“இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்” என்ற ஷெராபுதீன் கண்ணீருடன் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *