ஒரு மாபெரும் புரட்சியாகும்; இந்த மாநாடு பெரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது – சீமான் நம்பிக்கை!!

திருச்சி
திருச்சியில் கடந்த 21-ம் தேதி நடந்த நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாடு பேரெழுச்சியாக நடைபெற்று முடிந்தது.

இம்மாநாட்டுக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாங்கள் வைக்கிற அரசியலை புரிந்துகொண்டு பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் எனது அன்பும், மகிழ்ச்சியும்.

இது தமிழரின் வரலாற்றில் நடந்த பெரும் மாறுதலாகும். ஒரு மாபெரும் புரட்சியாகும். இந்த மாநாடு பெரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இது ஒரு தொடக்கம் தான். நம் பணி தொடரட்டும். களத்தில் வென்று முடிப்பது தான் நம் இலக்கு.

அதற்காக எல்லோரும் ஈடுபாட்டோடு, அரும்பாடுபட்டு நம் வெற்றியை தொடுவோம். எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து சாதனை தான். கடுமையான உழைப்பை கொடுத்து நம் வெற்றியை அடைவோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *