திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில் – திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.

அவருக்கு கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை ‘ரோடு ஷோ’வாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

தொடர்ந்து பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1கோடியே 45 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *