சென்னை:
பீகாரின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ பீகாரின் ஒவ்வொரு கிராமத்திற்காகவும், ஒவ்வொரு வீட்டுக்காகவும், ஒவ்வொரு இளைஞருக்காகவும் நான் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 55,000 கி.மீ கிராமப்புற சாலைகளை அமைத்துள்ளது. 1.5 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. 26 கோடி வீடுகளுக்கு குழாய் நீரை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.
முன்னதாக, வைஷாலி – தியோரியா ரயில் பாதை திட்டம், முசாபர்பூர், பேட்டியா வழியாக பாடலிபுத்திரம் – கோரக்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கங்கை நதியை பாதுகாத்தல், புனரமைத்தலுக்காக ரூ.1800 கோடி மதிப்பில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் பிற மூத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.