திருச்​சியி​லிருந்து தஞ்​சாவூர் வந்த தவெக தலை​வர் விஜய்யின் காரை பின் தொடர்ந்​த​ போது விபத்தில் சிக்கி 2 இளைஞர்​கள் படுகாயம்!!

தஞ்சாவூர்:
திருச்​சியி​லிருந்து தஞ்​சாவூர் வந்த தவெக தலை​வர் விஜய்யின் காரை பின் தொடர்ந்​த​ போது விபத்தில் சிக்கி 2 இளைஞர்​கள் படு​காயமடைந்​தனர்.

தஞ்​சாவூர் அருகே நேற்று தவெக நிர்​வாகி​கள் சந்​திப்பு கூட்​டத்தில் பங்​கேற்க அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் விமானம் மூலம் திருச்சி வந்து, அங்​கிருந்து காரில் கூட்​டம் நடந்த பகு​திக்கு வந்​தார்.

அப்​போது, அவரது வாக​னத்​தின் முன்​பும், பின்​பும் ஏராள​மான இளைஞர்​கள் இருசக்கர வாக​னங்​களில் பின்​தொடர்ந்து வந்​தனர். இதில், தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்டி அருகே வளப்​பகுடி வந்​த​போது, திருச்சி கல்​கண்​டார்​கோட்​டையைச் சேர்ந்த விக்​னேஷ், அவரது நண்​பர் ஷாருண் ஆகியோர் சென்ற இருசக்கர வாக​னம் சென்​டர் மீடியனில் மோதி​யது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்​புலன்ஸ் மூலம் தஞ்​சை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதேபோல, தவெக கூட்​டத்​தில் பங்​கேற்​று​விட்டு சாலியமங்​கலம் அருகே உள்ள கள்ளிமேடு பகு​தி​யைச் சேர்ந்த கலைமணி, முத்​து, துர்​கா ஆகியோர் ஒரே பைக்கில் வீடு திரும்​பினர்.

வல்​லம் புதூர் பகு​தி​யில் விபத்​தில் சிக்கி காய மடைந்தனர். இவர்களும் தஞ்சை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இந்த விபத்​துகள் குறித்து செங்​கிப்​பட்டி போலீ​ஸார்​ வி​சா​ரிக்கின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *