நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’. இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும்.
இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். அதன்பின் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்லைப் படத்தில் இணைத்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ‘தக்லைப்’ படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.
தற்போது ‘தக்லைப்’ படத்தில் கமலுடன் சிம்பு, அசோக் செல்வன் நடித்து வருகிறார்கள்.