இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல; வளர்ச்சிக்கான நல்வாய்ப் புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – சீன அமைச்சர் வாங் யீ பேச்சு!!

புதுடெல்லி:
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது:

பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் வகுத்துக் கொடுத்த பாதையில் இரு நாடுகளும் பயணிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும்.

மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு சீனா தனது ஆதரவை அளிக்கும். இவ்வாறு வாங் யீ கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *