கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது – தமிழக அரசு பெருமிதம்!!

சென்னை:
‘கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து, அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் தலைநக​ராக தமிழகம் உரு​வெடுத்​துள்​ளது.

இளைஞர்​களை ஆக்​கப்பூர்​வ​மான பணி​களில் ஈடு​படுத்​த​வும், சிதறிக் கிடக்​கும் இளைஞர்​களின் ஆற்​றல்​களைத் திரட்​ட​வும், அவர்​களை மனஉறுதி படைத்​தவர்​களாக உரு​வாக்​கும் பெரும் பொறுப்பை நிறைவேற்​றும் வகை​யில், இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யின் சிறப்​பான பணி​களுக்கு தமிழக அரசு ஊக்​கமளித்து வரு​கிறது.

திமுக அரசு சார்​பில், 44-வது செஸ் ஒலிம்​பி​யாட், சென்னை ஃபார்​முலா-4 கார் பந்​த​யம், சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் சாம்​பியன்​ஷிப், ஸ்கு​வாஷ் உலகக் கோப்​பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்​பியன்​ஷிப், கேலோ இந்​தியா இளைஞர் விளை​யாட்டு உள்​ளிட்ட போட்​டிகள் நடத்​தப்​பட்​டு, உலகள​வில் விளை​யாட்டு ஆர்​வலர்​கள் மத்​தி​யில் தமிழகம் முக்​கிய​மான விளை​யாட்டு களமாக மதிக்​கப்​படு​கிறது.

விளை​யாட்​டுப் போட்​டிகளில் ஆர்​வ​முடன் பங்​கேற்​கும் வீரர்​களுக்கு பயிற்​சிகள் பெற உதவித் தொகை, தங்​கும் இடவச​தி, போட்​டிகளில் பங்​கேற்க வெளி ஊர்​களுக்​கும் வெளி​நாடு​களுக்​கும் சென்​று​வரும் பயணச் செல​வு, வெற்றி பெற்ற வீரர் வீராங்​க​னை​களுக்​குப் பரிசுகள், ஊக்​கத்​தொகைகள் அனைத்​தும், போட்​டிகளுக்கு ஏற்ப வழங்​கப்​படு​கிறது.

சிறந்த வெற்​றிகளை ஈட்டி தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் புகழ் தேடித்​தரும் வீரர், வீராங்​க​னை​களுக்கு அரசுத் துறை​கள், பொதுத்​துறை நிறு​வனங்​களில் உயர் ஊதி​யத்​துடன் பணி நியமனம் வழங்​கப்​படு​கிறது.

மூன்று சதவீத இடஒதுக்​கீட்​டின்​கீழ் 5 ஆண்​டு​களில் 70 மாற்​றுத் திற​னாளி விளை​யாட்டு வீரர்​கள் உள்​ளிட்ட 301 விளை​யாட்டு வீரர்​கள் அரசு, பொதுத்​துறை நிறு​வனங்​களில் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

அதே போல், சர்​வ​தேச தேசிய அளவி​லான விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​கள் வென்ற மாற்​றுத் திற​னாளி விளை​யாட்டு வீரர்​கள் உட்பட 6,689 வீரர் வீராங்​க​னை​களுக்கு ரூ.215.78 கோடி ஊக்​கத்​ தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை செம்​மஞ்​சேரி​யில் ரூ.261 கோடி​யில் உலகத் தரத்​திலான விளை​யாட்டு நகரம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. 234 தொகு​தி​களி​லும் தொகு​திக்கு ஒரு சிறு விளை​யாட்டு அரங்​கம் அமைக்​கப்​படும் என அறி​வித்​து, 141 அரங்​கங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் உள்ள 12,525 கிராம ஊராட்​சிகளுக்​கும், 12,831 நகர்ப்​புற உள்​ளாட்​சிகளுக்​கும் கலைஞர் விளை​யாட்டு உபகரணங்​கள் தொகுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறான நடவடிக்​கைள் மூலம், ‘இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநகரம் தமிழகம்’ என இன்று பெற்​றுள்ள புகழ், நாளை ‘உல​கின் விளை​யாட்​டுத்தலைநகரம் தமிழகம்’ என்​னும் பெரு​மை​யை​யும் புகழை​யும்​ ஈட்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *