சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, அனு​மதி பெற்று வைத்​துள்ள 2,364 துப்​பாக்​கி​களை உடனடி​யாக திரும்ப ஒப்​படைக்க சம்​மந்​தப்​பட்​ட​வர்​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளோம் -சென்னை காவல் ஆணை​யர் அருண்!!

சென்னை:
சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, உரிமம் பெற்ற 2,364 துப்​பாக்​கி​களை திரும்ப ஒப்​படைக்க வேண்​டும் என, காவல் ஆணை​யர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, சென்னை காவல் ஆணை​யர் அருண் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தல் தேதி விரை​வில் அறிவிக்​கப்பட உள்​ளது.

அதற்கு முன்​னரே தேர்​தல் பாது​காப்​பு, கண்​காணிப்பு மற்​றும் ஒருங்​கிணைப்பு பணி​களில் சென்னை காவல்​துறை ஈடு​பட்​டுள்​ளது.

அனு​மதி பெற்று வைத்​துள்ள 2,364 துப்​பாக்​கி​களை உடனடி​யாக திரும்ப ஒப்​படைக்க சம்​மந்​தப்​பட்​ட​வர்​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளோம்.

காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு உட்பட சென்னை காவல் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் 24 சட்​டப்​பேரவை தொகு​தி​கள் வரு​கிறது.

அவற்​றில் 5,445 வாக்​குச்​சாவடிகள் உள்​ளன. இவற்றில் 1,077 பதற்றமானவை. அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் சிசிடிவி கேமரா பொருத்​தப்பட உள்​ளது. சென்​னை​யில் 5,055 ரவுடிகள் உள்​ளனர்.

அவர்களில் பெரும்​பாலானவர்​கள் சிறை​யில் உள்​ளனர். இவர்​களில் 2,300 ரவுடிகளிடம் எந்த குற்​ற​மும் செய்ய மாட்​டோம் என எழுதி வாங்கி உள்​ளோம்.

இந்த உறு​தி​மொழியை மீறி​னால் பிணை​யில் வெளிவர முடி​யாத​படி சிறை​யில் அடைக்​கப்​படு​வர். பல ரவுடிகள் சென்​னைக்குள் நுழை​யாதபடி நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சமூக வலைதளங்கள்

வதந்​தி, அவதூறு, உண்​மைக்கு புறம்பான தகவல்​கள் பரப்​பப்​படு​வதை தடுக்க சமூக வலை​தளங்​களை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறோம்.

ஆவணங்​கள் இன்றி எடுத்​துச் செல்​லப்​படும் பணத்தை பறி​முதல் செய்ய 56 பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அவர்​களு​டன் ஒருங்​கிணைந்து போலீ​ஸார் பணி​யாற்​று​வார்​கள். சென்​னை​யில், இது​வரை 7 இடங்​களில் மட்​டுமே போராட்​டம் நடத்த அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

தேர்​தலை முன்​னிட்டு 350-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பிரச்​சா​ரம் மற்​றும் பொதுக்​கூட்​டம் நடத்த அனு​மதி அளிப்​பது தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

மேலும், சென்​னை​யில் ஒரு இடத்​தில், ரோடு ஷோ நடத்த அனு​ம​திப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கிறோம்.

தேர்​தல் பாது​காப்பு பணி​யில் ஈடுபட மத்​திய தொழில் பாது​காப்பு படை​யினரும் வரு​கின்​றனர்.

இவ்​வாறு ஆணை​யர் தெரி​வித்​தார். அப்​போது, நுண்​ணறிவு பிரிவு துணை ஆணை​யர் ராமமூர்த்​தி உடன்​ இருந்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *