ஐ.பெரியசாமியின் காலைத் தொட்டு ஆசிபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன்!!

பரபரப்பான அரசியல் சூழலில் கட்சி வேறுபாட்டினை கடந்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பாஸ்கு திருவிழாவில் நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விஸ்வநாதன், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகன் சதீஷை அழைத்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அறிமுகப்படுத்தியதுடன் பெரியப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு என்று சொல்ல, அவரது மகன் தயங்கியவாறு , முழங்காலைத் தொட்டு வணங்க, நன்றாக காலில் விழு என்று திண்டுக்கல் சீனிவாசன் அதட்ட, மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலைத் தொட்டு ஆசிபெற்றார் சதீஷ்.அத்துடன் நத்தம் ஆர்.விஸ்வநாதனும் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைகொடுத்து பேசி கொண்டனர்.

கட்சி வேறுபாட்டை மறந்து முக்கிய பிரமுகர்கள் ஒன்றாக அமர்ந்த பேசியது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை கொடுத்ததாம். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’…

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *