சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!

சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப் பாளரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் ஆக இருந்த ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். இவர் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்குனர் இயக்கியிருந்தார்.

இதன் காரணமாக இயக்குநர் அமீருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகினார். அவரிடம் ஜாபர் சாதி தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *