சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி – அண்ணாமலை!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை , சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி பரப்புரைக்காக சிறையில் இருந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுப்பது செந்தில் பாலாஜிதான்.

இம்முறை திமுக தங்கச் சுரங்கத்தையே கொட்டினாலும் கோவையில் பாஜகதான் வெற்றிபெறும். பதிவாகும் வாக்குகளில் 60% பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன். கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்; பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நாக்பூரை இந்தியாவின் தலைநகராக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்ற கமல்ஹாசனின் கருத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, கமல்ஹாசன் நல்ல மனநல மருத்துவரிடம் தனது மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *