”பாஜகவும், அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது” – கே.பாலகிருஷ்ணன் பேட்டி!!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாமக ஆகியவை பல அணிகளாக உடையும் என்று கே பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , சென்னையிலிருந்து நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களில் ஒருவர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்.

நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற தோல்வி பயத்தில் வாக்காளர்கள் இடத்தில் பண பலத்தை காட்டி வெற்றி பெற வெற்றி பெறலாம். குறைந்தபட்சம் டெபாசிட் தொகையாவது தகவைக்கலாம் என்று நோக்கத்தில் இந்த நடைமுறையை பாஜகவினர் பையாண்டுள்ளனர்.

ஊழலை ஒழிப்பது தான் எங்களது நோக்கம் என்று கூறிவரும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த நான்கு கோடி எங்கிருந்து வந்தது ? இது யாருக்காக அனுப்பப்படுகிறது என்று விவரத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

பாஜக தலைவர் யாருமே வாய் திறக்காத நிலையில் அவர்கள் தான் இதற்கு பின்னால் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது . அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் வாய் திறக்கவில்லை .

இதனால் பாஜகவும், அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதிமுக ஏற்கனவே பல ஆண்டுகளாக பிரிந்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அதன் மேலும் பல அணிகளாக வாய்ப்புள்ளது . பாமகவின் நிலையும் அப்படித்தான். தேர்தலுக்குப் பிறகு அரசியலில் மிகப்பெரிய சுனாமி அலை வீசப்போகிறது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *