தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற வித்யாம்பிகை சமதே திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 3வது ஞாயிற்று கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

இந்த திருநாளில் பால்குடம் எடுத்து சுவாமியை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார்.
இதனை தொடர்ந்து சுமாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தார். துர்கா ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.