இன்றைய இளைஞர்களின் கடமை என்ன? ஹேப்பிராஜ் -ல் பாருங்கள் கோவையில் ஜி.வி.பிரகாஷ் பேட்டி

கோவை,
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஹேப்பிராஜ் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் தலைமையில் ஹேப்பிராஜ் பட குழுவினர் கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்க வளாகத்தில் ரசிகர்களை சந்தித்தனர்.

அப்போது அங்கு அமைக் கப்பட்டி ருந்த மேடையில் எரி ரசிகர்களை உற்சாகப் படுத்திய அக்குழுவினர் ஹேப்பிராஜ் திரைப் படத்தை திரையரங்கில் கண்டு ரசித்து ஆதரவளிக் குமாறு வலியுறுத்தினர்.

அப்போது அத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை பாடியும் நடனமாடியும் ரசிகர்களை மகிழ்வித்த ஜி.வி. பிரகாஷ் படத்தில் நகைச்சுவை உட்பட ஜனரஞ்சகமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.


முன்னதாக செய்தியா ளர்களை சந்தித்த ஜி.வி.பிரகாஷ் வருகிற 27-ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தற்பொழுதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தந்தை மகனுக்கு இடையேயான பிணைப்பை வெளிக்காட் டும் விதமான கதையம்ச த்துடன் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குடும்ப பின்னணியுடன் இன்றைய இளைஞர்களின் கடமை என்ன என்பதையும் தெளிவாக இப்படத்தில் காட்டியிருப் பதாகவும் கூறிய அவர், இளைஞர் களின் சமூக அர்ப் பணிப்புடன் குடும்ப அர்ப்பணிப்பு என்ன என்பதை ஹேப்பி ராஜ் திரைப்படம் மூலம் கூறியிருப்பதாகவும் கட்டி காட்டினார்.

மேலும் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல் என்றும் எனவே அனைவரும் தங்களது வாக்குகளை வீணாக் காமல் கண்டிப்பாக வாக் களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்ற அடிப்படையில் வாக்கு சதவீதத்தை அதிகரித்தங்களுக்கு விருப்பமான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நிறைய கட்சிகள் தற்போது உள்ள நிலையில் அரசியல் ரீதியாக தான் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனவும் கூரியதுடன், சமூக அக்கறையுடன் ஏதாவது பிரச்சனைகள் என்றால் அதற்கு மட்டுமே தான் குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *