சென்னை:
அரசன்’ படத்தில் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டப்படி தொடங்கப்படவில்லை.
இதற்கு வேல்ஸ் நிறுவனம் – சிம்பு இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது சிம்பு உடன் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘விடுதலை’ படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ‘செக்க சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு சிம்பு – விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். சிம்பு இல்லாமல் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
‘அரசன்’ படத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களும் நடிக்கவுள்ளார்கள்.
இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு இருக்கிறது. அதற்குள் சிம்புவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையும் முடிவுக்கு வரும் என தெரிகிறது.