கோவை:
கோவையில் பெண்களுக்கான கேலோ இந்தியா ஃபென்சிங் லீக் போட்டிகள் நடை பெற்றது. ஃபென்சிங் விளையாட்டில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கேலோ இந்தியா,இந்திய ஃபென்சிங் அசோசியேஷன் இணைந்து கோவையில் பெண்களுக்கான வாள் வீச்சு போட்டி கோவை பாரதியார் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமை வகித்தார்..
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் தலைவர் தனசேகரன்,கன்வீனர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

கேலோ இந்தியா மகளிர் ஃபென்சிங் லீக் போட்டிகளாக நடைபெற்ற இதில், கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு என எப்பி,ஃபாயில்,சேபர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டி பெண்கள் விளையாட்டு வளர்ச்சிக்கும், குறிப்பாக ஃபென்சிங் விளையாட்டில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக நடைபெறுவதாக கோவை மாவட்ட வாள் வீச்சு சங்க செயலாளர் தியாகு நாகராஜ் தெரிவித்தார்..

இப்போட்டியில் மீள்கழனி சிலம்பம் அகாடமியை சார்ந்த மாணவிகள் (P.திரேஷ்னபஹவத்(ஃபாயில் first place cadet & junior)
M.ஸ்ரீமதி(சேபர் senior bronze),
P.நேத்ரா(எப்பி senior silver & junior gold),
G.அபிநயா(ஃபாயில் cadet branch),
K.ஓவியாஸ்ரீ(சேபர் senior bronze),
L.S.பாலவிகாஷினி(சேபர் cadet & junior bronze) )
பங்கேற்று பெருவாரியான வெற்றிகளை பெற்றனர்..