தவெக தலை​வர் விஜய் வரவால் தேசிய ஜனநாய கூட்​டணி வாக்கு வங்​கி​யில் எந்​தத்தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்தாது – மகாராஷ்டிரா முதல்வர் கருத்து!!

மதுரை:
தவெக தலை​வர் விஜய் வரவால் தேசிய ஜனநாய கூட்​டணி வாக்கு வங்​கி​யில் எந்​தத் தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்தாது என மகா​ராஷ்டிரா முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரிவித்தார்.

மதுரை தெற்கு தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ராம.சீனி​வாசன் வேட்​புமனுத் தாக்​கலில் பங்​கேற்​ப​தற்​காகமகா​ராஷ்டிரா முதல்​வர் தேவேந்திர பட்​னா​விஸ் நேற்று மதுரை வந்​தார்.

முன்​ன​தாக மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் தரிசனம் செய்​த அவர், பின்னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ்​நாட்​டில் மாற்​றம் வர வேண்​டும்.

நல்ல அரசு அமைய வேண்​டும் என மீனாட்சி அம்மனிடம் வேண்​டினேன். தமிழகத்​தில் மக்​கள் விரும்​பும் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு அமை​யும்.

திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் திமுக அரசின் செயல்​பாடு கண்​டிக்​கத்​தக்​கது. திமுக அரசு சனாதன விரோத, இந்து விரோத அரசாக உள்​ளது. இந்து சமூகத்தை வெறுக்​கும் அரசாக உள்​ளது.

நாட்​டில் காலம் கால​மாக நடை​முறை​யில் உள்ள பழக்​கத்​தை, இந்​துக்​களின் பழக்​கத்தை மதிக்க மறுக்​கிறார்​கள்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதை​யும் நிறைவேற்​ற​வில்​லை.

அதற்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றம் சென்​றனர். உச்ச நீதி​மன்ற உத்​தர​வை​யும் தமிழக அரசு நிறைவேற்​ற​வில்​லை. எனவே இந்தத் தேர்தலில் தமிழக அரசுக்கு மக்​கள் பதிலடி கொடுப்​பார்​கள்.

நடிகர் விஜய்யால் தேசிய ஜனநாயக் கூட்​ட​ணி​யின் வாக்கு வங்கி பாதிக்​கப்​படும் என்ற தோற்​றம் உரு​வாக்​கப்​படு​கிறது. விஜய்​யால் எந்​தத் தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்த முடி​யாது.

உறு​தி​யாக தேசிய ஜனநாயக் கூட்​டணி அரசு அமை​யும். இவ்​வாறு அவர் கூறி​னார். மதுரை மத்​திய தொகுதி புதிய நீதிக்​கட்சி வேட்​பாளர் சுந்​தர்​.சி, பாஜக பார்​வை​யாளர் ராஜரத்​தினம் உடனிருந்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *