மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஏப்ரல் 21ல் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 23ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது.
ஏப்.19ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏப்.23ல் இந்திரபூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. ஏப்.23 அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.