தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி ஏப்​.21, 22, 23 மற்​றும் மே 4 ஆகிய 4 நாட்​கள் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்​கடைகள், பார்​கள் மூடப்​படும் – தேர்​தல் அதி​காரி​கள் உத்​தரவு!!

சென்னை:
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி ஏப்​.21, 22, 23 மற்​றும் மே 4 ஆகிய 4 நாட்​கள் மாநிலம் முழுவதும் உள்ள மதுக்​கடைகள், பார்​கள் மூடப்​படும் என்று அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்​தல் நாளான ஏப்​.23-ம் தேதி, வாக்​குப்​ப​திவு நிறைவடை​யும் அன்று மாலை 6 மணிக்கு முந்​தைய 48 மணி நேரத்தை அமைதி நேர​மாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இதனால் மாநிலத்​தில் அமை​தியை கடைபிடிக்​கும் நோக்​கில் மதுக்​கடைகளை மூட தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்தி இருந்​தது.

அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து மாவட்ட தேர்​தல் அலு​வலர்​களும், மதுக்​கடைகளை மூடு​வது தொடர்​பாக செய்​திக்​குறிப்​பு​களை வெளி​யிட்​டுள்​ளனர்.

அதன் விவரம்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு அனைத்து மாவட்​டங்​களி​லும், தேர்​தல் சுதந்​திர​மாக​வும், நியாய​மாக​வும், அமை​தி​யாக​வும், சுமுக​மாக​வும் நடை​பெறு​வதை உறு​தி​ செய்​யும் நோக்​கில், தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை (கடைகள் மற்​றும் பார்​கள்) விதி​கள் 2003, விதி 12(2)​படி உரிமம் பெற்று இயங்கி வரும் இந்​திய தயாரிப்பு அயல்​நாட்டு மது​பானம் (IMFL) சில்​லறை விற்​பனை கடைகள், அவற்​றுடன் இணைந்த பார்​கள் உள்​ளிட்ட அனைத்​தும் ஏப்​. 21-ம் தேதி காலை 10 மணி​முதல், வாக்​குப்​ப​திவு நாளான 23-ம் தேதி நள்​ளிரவு 12 மணி வரை​யும், வாக்கு எண்​ணிக்கை நாளான மே 4-ம் தேதி என 4 நாட்​களுக்கு மூடப்​பட்​டிருக்​கும்.

மேற்​குறிப்​பிட்ட நாட்​களில் மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்பட மாட்​டாது.

அன்​றைய தினங்​களில் விதி​களுக்கு மாறாக மது விற்​பனை ஏதும் செய்​யப்​பட்​டால் கடுமை​யான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பு​களில் கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *