சேயோன் படத்தின் புது அப்டேட்!

சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்ஷன், நகைச்சுவையுடன் கூடிய கிராமப்புற குடும்ப பொழுது போக்கு படமாக எடுக்கப்பட உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்றும் மதுரையில் கள்ளழகர் ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார்.

மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் ஆயுத பூஜை பண்டிகையை யொட்டி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *