சென்னை:
சேகர் கர்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து அவரே இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் அடுத்த படத்திற்கு ‘கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ‘ என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
இது தொடர்பான அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க உள்ளார். அப்துல் கலாம் பயோபிக் படம் அவர் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது