தமிழகத்​தில் பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யை உரு​வாக்கி அரசாணை !!

சென்னை:
தமிழகத்​தில் பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யை உரு​வாக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தமிழக முதல்​வ​ராக நேற்று முன்​தினம் பொறுப்​பேற்​றுக் கொண்ட விஜய், 3 முக்​கிய அரசாணை​களில் கையெழுத்​திட்​டார். அதில், ஒன்று பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகையி​லான ‘சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை’ என்​னும் திட்​டம்.

இந்த திட்​டத்​துக்​கான அரசாணையில் கூறி​யிருப்​ப​தாவது: பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், தடுப்பு மற்​றும் பாது​காப்பு உத்​தி​களை முதன்மை மற்​றும் ஒற்றை இலக்​காகக் கொண்டு செயல்​படக்​கூடிய ‘சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை’ உரு​வாக்​கப்​படும்.

ஆபத்​தில் உள்ள பெண்​களுக்கு உதவிடும் வகை​யில், இப்​படை​யினரின் இருப்பை வெளிப்​படுத்​தும் வகையி​லான நடவடிக்​கைகள் மூலம் பெண்​களிடையே நம்​பிக்​கையை ஏற்​படுத்​தி, இந்த சிறப்​பு அதிரடிப்​படை போது​மான போலீ​ஸாருடன் அதிநவீன வசதி​களு​டன் மாநிலம் முழு​வதும் உரு​வாக்​கப்படும்.

குற்றச் சம்​பவங்​கள் நிகழ வாய்ப்​புள்ள இடங்​களைக் கண்​டறிந்து கண்​காணித்​தல், பொது இடங்​களில் கண்​காணிப்பு மற்றும் தங்​கள் இருப்பை மேம்​படுத்தி சுற்​றுக்​காவல் பணி​கள் மேற்​கொண்டு குற்​றச்​சம்​பவங்​கள் நடை​பெறாமல் தடுத்​து, பெண்​களுக்கு பாது​காப்​பான சூழ்​நிலை உரு​வாக்​கப்படும்.

பேருந்து நிறுத்​தங்​கள், ரயில் நிலை​யங்​கள், கல்வி நிலை​யங்​கள் மற்​றும் தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் அமைந்​துள்ள இடங்​கள் உள்​ளிட்ட பொது​மக்​கள் அதிக அளவில் செல்லக்​ கூடிய மற்​றும் நெருக்​கடி மிகுந்த பகு​தி​களில் தங்​கள் இருப்பை அதிக அளவில் வெளிப்​படுத்​தி, சட்​ட​விரோத செயல்​கள் தடுக்கப்படும்.

புகார்​கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்​கப்​பட்ட நபர்​களை மீட்​டு, அவர்​களது பாது​காப்பு மற்​றும் நலனை உறுதி செய்​வதுடன் இதர ஆதர​வு​கள் கிடைத்​திட வகை செய்​வது உள்​ளிட்ட உதவி​கள் உரிய நேரத்​தில் செய்​யப்படும்.

சமூக நலத்​துறை, கல்​வித் துறை, அரசு​சாரா தொண்டு நிறு​வனங்​கள் சம்​பந்​தப்​பட்ட முகமை​களு​டன் ஒருங்​கிணைந்து விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதுடன் சமூகத்​தில் பலதரப்​பட்ட மக்​களை ஒருங்​கிணைத்து பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் பணி​களில் ஈடு​படும்.

‘சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் ​படை’​யின் தலைமை அலு​வல​கம் டிஜிபி அலு​வல​கத்​தில் இயங்​கும். ஐஜி அந்​தஸ்​தில் ஒரு உயர் அதி​காரி தலை​மையேற்​பார்.

அவருக்​குக் கீழ் ஒரு எஸ்​பி, 2 டிஎஸ்​பி-க்​கள், 4 ஆய்​வாளர்​கள், 8 உதவி ஆய்வாளர்​கள் மற்​றும் 20 பேர் என மொத்​தம் 36 போலீ​ஸாருடன் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை, முதல்​வரின் நேரடி கண்​காணிப்​பில் இயங்​கும். இவ்​வாறு அதில்​ கூற​ப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *