‘புஷ்பா 2’ படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட படக்குழு!!

உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது ‘புஷ்பா: தி ரூல்’ .இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது.

இந்நிலையில் படத்தில் டீஸர் குறித்து புதிய போஸ்டர் வெளியாகியிருந்தது. ‘புஷ்பா 2’ படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா தி ரைஸ் படம். ‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா கம்பீரத்துடன் ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த ‘புஷ்பா: தி ரூல்’ படம் முக்கியமான ஒன்று. நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் ‘புஷ்பா 2’ படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *