எனது மகன் எம்எல்ஏ ஆனதில் எனக்கு மகிழ்ச்சி; மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம் – லீமா ரோஸ் !!

புதுச்சேரி:
“நீங்கள் அமைச்சராவீர்களா என்று கேட்கிறீர்கள் அது இறைவன் சித்தம்தான். தவெக ஆட்சியில் நான் 8 அமைச்சர்கள் கோரியுள்ளதாக கேட்கிறீர்கள்.

அப்படியெல்லாம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்.” என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் தாயார் லீமா ரோஸ் கேலரியில் அமர்ந்து பார்த்தார். அவருடன் ஜோஸ் சார்லஸ் மனைவி குடும்பத்தினர் வந்திருந்தனர். லீமா ரோஸ் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுகவில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை அவர் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் லீமா ரோஸ், “எனது மகன் எம்எல்ஏ ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்.

நீங்கள் அமைச்சராவீர்களா என்று கேட்கிறீர்கள் அது இறைவன் சித்தம்தான். தவெக ஆட்சியில் நான் 8 அமைச்சர்கள் கோரியுள்ளதாக கேட்கிறீர்கள்.

அப்படியெல்லாம் இல்லை. இது குறித்து தவறாக யூடியூப்பில் செய்தி வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

அவதூறாக பேசுவோர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியிலும் உள்ளோம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *