கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!!

சென்னை:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின்.

இவர் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார்.

பின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். அதன்பின், கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ‘ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’, ‘ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ‘ஹாய்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஹாய்’ படத்தை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார் நடிகர் கவின். ராம் சங்கையா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ‘லப்பர் பந்து’, ‘தக் லைஃப்’ மற்றும் ‘பரிமளா அன் கோ’ பட புகழ் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கவுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம், கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதைக் களமாக அமையவுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *